ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட 2-ம் கட்ட பணிகள்: காணொலி வாயிலாக திறந்துவைத்தார் முதல்வர்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட 2-ம் கட்ட பணிகள்: காணொலி வாயிலாக திறந்துவைத்தார் முதல்வர்
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட 2-ம் கட்ட பணிகள்: காணொலி வாயிலாக திறந்துவைத்தார் முதல்வர்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் ரூ.4,600 கோடி மதிப்பில் செயலப்படுத்தப்பட இருப்பதாகவும், அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் தமிழ்நாடு முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று காணொலிக் காட்சி வாயிலாக தருமபுரி மாவட்டத்தில் ரூ.56,20,30,000 மதிப்பீட்டில் 46 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ. 35,42,93,000 மதிப்பீட்டில் 591 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 13,587 பயனாளிகளுக்கு ரூ.1,57,41,88,000 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “இனி என்னை யாராவது ‘நீ என்ன சாதித்தாய்’ என்று கேட்டால் அதை பட்டியிடும் போது அதில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிச்சயம் இருக்கும். கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மக்களின் மிகபெரிய குறையாக இருந்த குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் ‘கூட்டு குடிநீர் திட்டம்’, கலைஞர் கருணாநிதி ஆட்சியில் துவங்கபட்டது. நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது எண்பது சதவீத பணிகள் நடைபெற்றது. பின்னர் வந்த அதிமுக ஆட்சி கிடப்பில் போடபட்டுவிட்டது. இனி மீண்டும் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது, எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இனி வரும் நாள்களில் சேலம் கோட்டையூர், தருமபுரி ஒட்டனூர் இடையே மேம்பாலம் அமைக்கப்படும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இரண்டாம் கட்ட பணிகள் ரூ.4,600 கோடி மதிப்பில் செயலப்படுத்தப்படும். அதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. தருமபுரியில் பால் உற்பதியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பால் பதனிடும் நிலையம். தர்மபுரியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும். தர்மபுரி ஆட்சியர் வளாகத்தில் நாற்பது கோடி மதிப்பில் கூடுதல் அலுவலக கட்டிடம் அமைக்கப்படும்.

இப்போதெல்லாம் எந்த பகுதிக்கு சென்றாலும் மகளிர் என்னை வாழ்த்துவதை காண முடிகிறது. மகளிர் சுய உதவி குழுவினர் என்னிடம் வந்து ‘உங்களால் தலைநிமிர்ந்து இருக்கிறோம்’ என கூறும் போது என்னை அறியாமல் மகிழ்ச்சி அடைகிறேன் நான்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com