\
சசிகலாவுக்குத் தகுதியில்லை: பி.ஹெச்.பாண்டியன்

சசிகலாவுக்குத் தகுதியில்லை: பி.ஹெச்.பாண்டியன்

சசிகலாவுக்குத் தகுதியில்லை: பி.ஹெச்.பாண்டியன்
Published on: 

அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதலமைச்சராகவும் பதவியேற்கும் தகுதி சசிகலாவுக்கு இல்லை என்று அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக செய்தியாளர்களிடம் கூறிய பி.ஹெச்.பாண்டியன், ஜெயலலிதா கல்லறை காயும் முன்பாகவே கட்சிப் பதவியை சசிகலா ஏற்றதாகவும் குற்றம் சாட்டினார். ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா குடும்பத்தினர் ராஜாஜி ஹாலில் அவரது உடலைச் சுற்றி நின்று கொண்டிருந்தது அதிர்ச்சியை அளித்தாகவும் அவர் கூறினார். முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது வந்த இடைத்தேர்தல் பணிகளுக்கான உத்தரவு எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு அமைச்சர்களிடம் பதிலில்லை என்றும் பி.ஹெச்.பாண்டியன் தெரிவித்தார். மேலும், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, மன்னிப்புக் கடிதம் கொடுத்து மீண்டும் கட்சியில் இணைந்தவர் என்று குறிப்பிட்ட பாண்டியன், தமிழகத்தின் முதலமைச்சராகவும், அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் பதவி வகிக்க தகுதி இல்லாதவர் சசிகலா என்று விமர்சித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com