புதிய உச்சத்தை நெருங்கும் பெட்ரோல் விலை....!

புதிய உச்சத்தை நெருங்கும் பெட்ரோல் விலை....!
புதிய உச்சத்தை நெருங்கும் பெட்ரோல் விலை....!

கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 79 ரூபாய் 55 காசுகளுக்கு விற்கப்பட்டது. சென்னையில் இதுவே அதிகபட்ச பெட்ரோல் விலையாகும். அதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு செப்டம்பரில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 71 ரூபாய் 55 காசாக குறைந்தது. தொடர்ந்து இறங்கு முகத்தில் காணப்பட்ட பெட்ரோல் விலை 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் 61‌ ரூபாய் 46 காசாகவும், 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் 63 ரூபாய் 2 காசாகவும் விற்கப்பட்டது.

இதன் பின், ஏற்றப்பாதைக்கு மாறிய பெட்ரோலின் விலை கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் 71 ரூபாய் 78 காசாக இருந்தது. இந்நிலையில், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 79 ரூபாய் 47 காசாக உள்ளது. இன்னும் 9 காசுகள் பெட்ரோல் விலை உயரும் பட்சத்தில் அது புதிய உச்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com