தொடர்ந்து விலையேறும் பெட்ரோல்: சைக்கிள் மீது கவனம் செலுத்தும் மக்கள்

தொடர்ந்து விலையேறும் பெட்ரோல்: சைக்கிள் மீது கவனம் செலுத்தும் மக்கள்

தொடர்ந்து விலையேறும் பெட்ரோல்: சைக்கிள் மீது கவனம் செலுத்தும் மக்கள்
Published on

பெட்ரோல் விலை உயர்வு எதிரொலி காரணமாக சைக்கிள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சைக்கிளுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர். தினமும் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்வோர் வாகனத்திற்கு நாளொன்றுக்கு பெட்ரோல் நிரப்ப குறைந்தபட்சம் 100 ரூபாய் செலவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது சைக்கிள்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

பெட்ரோல் விலை அதிகரிப்பால் புதிய சைக்கிள்கள் வாங்குவது மற்றும் கிடப்பில் போடப்பட்டுள்ள பழைய சைக்கிள்களை மீண்டும் பழுது பார்த்து பயன்படுத்துவது அதிகரித்துள்ளதால் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள சைக்கிள் கடைகளில் புதிய சைக்கிள் விற்பனை அதிகரித்துள்ளதோடு பழைய சைக்கிள் பழுது பார்க்கும் பணியும் சூடுபிடித்துள்ளது.

சாதாரண வகை சைக்கிள்கள் ரூபாய் நான்காயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலும் ஸ்போர்ட்ஸ் மாடல் சைக்கிள்கள் ரூபாய் 8000 முதல் 16 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது சைக்கிளுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என சைக்கிள் விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடுத்தர மக்கள் மட்டுமே சைக்கிள்களை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது டாக்டர்கள், என்ஜினியர்கள் உள்ளிட்ட வசதி படைத்தவர்களும் சைக்கிள்களை வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளதாகவும் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் நல்ல உடற்பயிற்சி என்பதோடு சுற்றுப்புறச் சூழல் பேணி பாதுகாக்கப்படுவதாக சைக்கிள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com