நாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது

நாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது

நாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது
Published on

முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் இயங்காது.

திமுகவின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி உடல்நிலைக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை, நேற்று பின்னடைவை சந்தித்தது. இன்று மாலை மிகவும் கவலைக்கிடமானது. இன்று மாலை 6.10 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது இறப்பால் நாளை விடுமுறை என்றும், 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை (8.8.2018) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் இயங்காது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று  தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள்  சங்க தலைவர் கே.பி.முரளி தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com