ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வணிகர்கள், விவசாயிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், தனியார் பள்ளிகள், அரசியல் கட்சிகள் நாளை கடையடைப்பு, போராட்டம், வேலைநிறுத்தம் போன்றவற்றை அறிவித்துள்ளன. அதன்படி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

