\
"கர்ணன்" திரைப்படம் வெளியான திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

"கர்ணன்" திரைப்படம் வெளியான திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

"கர்ணன்" திரைப்படம் வெளியான திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது
Published on

தூத்துக்குடியில் தனுஷ் நடித்த கா்ணன் படம் வெளியான சினிமா தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசியதாக 4 இளைஞா்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள சினிமா தியேட்டரில் தனுஷ் நடித்த கா்ணன் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், திரையரங்குக்கு படம் பார்க்க சென்ற இளைஞா்கள் சிலா் மது அருந்தியிருந்ததால் அவா்களை படம் பார்க்க அனுமதிக்காமல் திரையரங்கு நிர்வாகிகள் பணத்தை திரும்ப கொடுத்து அனுப்பி வைத்தனராம்.

இதையடுத்து, அந்த இளைஞா்களில் சிலர் திடீரென தங்கள் இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை பாட்டில்களில் பிடித்து திரையரங்கு வளாகத்தில் வீசிவிட்டு தப்பியோடினர் . இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் திரையரங்கு நிர்வாகத்தினா் புகார் அளித்தனா். திரையரங்கில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பெட்ரோல் குண்டு வீசியதாக தூத்துக்குடி ராஜீவ்நகர் 3 ஆவது தெருவைச் சோ்ந்த மிக்கேல் அந்தோணி அரவிந்த் (21), அந்தோணி ராஜ் (20), மருதநாயகம் (19), சுகுமார் (26) ஆகியோரை கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com