தமிழ்நாடு
இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
திருவள்ளூரில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
திருவள்ளூர் கிளம்பாக்கத்தில் வசித்து வருபவர் சரத்குமார். இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்ர். இவரது வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் அவரது வீட்டில் இருந்த கட்டில் ஒன்று சேதம் அடைந்துள்ளது. பெட்ரோல் குண்டு வீசியவர்கள் பற்றி பெரியபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன