Senthil
Senthilpt desk

உளுந்தூர்பேட்டை: அகில பாரத இந்து மகா சபை மாநில செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

உளுந்தூர்பேட்டையில் அகில பாரத இந்து மகா சபை மாநில பொதுச் செயலாளர் செந்தில் என்பவரது வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கேசவன் நகரில் வசித்து வருபவர் பெரி.செந்தில். இவர் அகில பாரத இந்து மகாசபா என்ற இந்து அமைப்பின் மாநில பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், வழக்கம் போல் நேற்றிரவு வீட்டின் முன்பக்க இரும்பு கேட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது நள்ளிரவில் வீட்டு வராண்டாவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

Senthil
Senthilpt desk

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து செந்தில், வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது அங்கு கண்ணாடித் துகள்கள் சிதறி கிடந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது தெருவில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பெட்ரோல் குண்டு எடுத்து வந்து செந்தில் வீட்டின் வராண்டாவில் வீசும் காட்சி பதிவாகி இருந்தது இது குறித்து உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு செந்தில் தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்து வருகின்றனர் இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com