\
கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் குண்டு வீச்சு

கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் குண்டு வீச்சு

கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் குண்டு வீச்சு
Published on

கோவை காந்திபுரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இன்று காலை 6 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே வந்ததும் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து வீசியுள்ளனர். குண்டு வெடித்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். புகாரின் பேரில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என்பது குறித்து காட்டூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com