துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி
Published on

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீடு உள்ளது. இன்று அதிகாலை சுமார் 03.15 மணி அளவில், மொத்தம் மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த 6 நபர்கள் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்ததாக தெரிகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் மர்ம நபர்களை துரத்தவே, அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து துணை ஆணையாளர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஆகவே அந்தப் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com