\
கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி - டாக்ஸி, ஆட்டோ கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி - டாக்ஸி, ஆட்டோ கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி - டாக்ஸி, ஆட்டோ கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு
Published on: 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இந்தியாவில் வாடகைக் கார், ஆட்டோ கட்டணங்கள், விமான பயணக் கட்டணங்களும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நாள் 20 சதவிகிதம் விலை அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில், கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. 

இதனால் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 71 புள்ளி 57 என்ற உச்சத்தை தொட்டு, பின்னர் 68 டாலராக குறைந்தது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளது. பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தால், அதன் எதிரொலியாக வாடகைக் கார், ஆட்டோ, விமான பயணம் உள்ளிட்ட கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com