பிரபாகரன் புகைப்படத்தை சீமான் பயன்படுத்த தடை கோரி மனு
சமீபத்தில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சீமான் சேர்ந்து இருப்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகியது. சீமான் விடுதலை புலிகளின் தலைவரை சந்தித்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று அனைவரும் நம்பியிருந்த வேளையில், ”விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் ”என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதனால் சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.
இந்நிலையில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், பிரபாகரன் படத்தை அரசியல் ஆதாயத்திற்காக சீமான் பயன்படுத்தி வருகிறார் என்றும் பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்கக்கோரி சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.