\
நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு

நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு

நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு
Published on

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ‌

பன்னீர்செல்வம் அணியைச் சே‌ர்ந்த முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 18ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு, முற்றிலும் ஒருதலைப் பட்சமாகவும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணான வகையிலும் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. எனவே, அந்த நம்பிக்கை வாக்கெடுப்பைச் செல்லாது என அறிவித்து, மீண்டும் வாக்குச்சீட்டுகள் மூலம் ரகசிய வாக்கெடுப்பு நடத்த சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் பாண்டியராஜன் தாக்கல் செய்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com