
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்த தமன்னா, விராட் கோலியை கைது செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அதில், “ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். அது தொடர்பான விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்நிலையில், நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்னிலையில் இந்த மனுவை விசாரணைக்கு எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.