\
ஓ.பி.எஸ் வெற்றியை செல்லாதென அறிவிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு

ஓ.பி.எஸ் வெற்றியை செல்லாதென அறிவிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு

ஓ.பி.எஸ் வெற்றியை செல்லாதென அறிவிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு
Published on: 

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அடைந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றியை செல்லாதென அறிவிக்கக்கோரி, போடிநாயக்கனூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளரான மிலானி என்பவர், தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது. இதே மனுதாரர், ஏற்கெனவே தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com