நடிகர் தனுஷிற்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரி மனு
நடிகர் தனுஷிற்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யவேண்டும் எனக்கோரி உயர்நீதிமன்ற மதுரைகிளையில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று உரிமை கோரி மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தனுஷ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையின் போது கதிரேசன் -மீனாட்சி தரப்பில் சில சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சான்றிதழ்களில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளனவா என கண்டறிய அவரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நேற்று அவர் நேரில் ஆஜரானார். அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்ட நிலையில், வழக்கு நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனுஷிற்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் எனக்கோரி கதிரேசன் தம்பதியர் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். தனுஷ் தாக்கல் செய்த சான்றிதழ்களில் குளறுபடிகள் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.