இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆதிநாதசுந்தரம் என்பவர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், இந்து மதத்தை அவமதிக்கும் வகையில், மகாபாரதத்தை கமல்ஹாசன் அவதூறாகப் பேசியதாகவும் இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.