தமிழ்நாடு
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் வந்தால் வழக்கு தொடர்வோம்: பீட்டா
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் வந்தால் வழக்கு தொடர்வோம்: பீட்டா
ஜல்லிக்கட்டிற்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டவந்தால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என பீட்டா அமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து பேட்டி அளித்த பீட்டா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நிக்குஞ் சர்மா, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் என்ற பெயரில் காளைகளை வதைக்கப்படுவது அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் போது காளைகள் செயற்கையான முறையில் ஓடவிடப்படுகின்றன. ஜல்லிக்கட்டு நடத்த கொண்டுவரப்படும் அவரச சட்டம் நீதிமன்ற வரம்புக்கு உட்பட்டவைதான் என கூறியுள்ளார்.