தமிழ்நாடு
பழைய ரூபாய் நோட்டுகளைப் பறித்துச் சென்றவர்கள் கைது
பழைய ரூபாய் நோட்டுகளைப் பறித்துச் சென்றவர்கள் கைது
நெல்லையில் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பறித்துச் சென்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அவர், தன்னிடமிருந்த ரூ.3 கோடி மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரை அணுகியுள்ளார். பழைய நோட்டுகளை மாற்றித் தருவதாக கூறிய ஜெயபால், ஆட்களை ஏவி பால்ராஜிடம் இருந்து பணத்தைப் பறித்துச் சென்றார்.
இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினர், பால்ராஜ், ஜெயபால், அவருக்கு உதவியவர்கள் என 12 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கோடி மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகள், 2 சொகுசுக் கார்கள், 6 இருசக்கர வாகனங்கள், 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.