\
நிபந்தனைகளுடன் ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி

நிபந்தனைகளுடன் ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி

நிபந்தனைகளுடன் ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி
Published on

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் மாற்றுப் பாதையில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்குத் திறக்கப்படும் நீரின் அளவு 15 ஆயிரம் கனஅடியிலிருந்து 12 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒகேனக்கலில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக அருவிப் பகுதிகளில் பரிசல் இயக்கவும், சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது நீர்வரத்து குறைந்திருப்பதால் 17 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கல் மீன் மார்க்கெட் முதல் கோத்திக்கல் வரை பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. ஆனால் பரிசல் துறை, ஐந்தருவி, மணல் திட்டு, ஊட்டமலை ஆகிய பகுதிக‌ளில் பரிசல் இயக்க அனுமதியில்லை.‌ மேலும் ஒகேனக்கலில் சேதமடைந்துள்ள பகுதிகளை சீரமைத்த பிறகே, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அதுவரை தடை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com