தமிழ்நாடு
சென்னையில் பிப்.16-ஆம் தேதி முதல் புத்தகக் காட்சி நடத்த அனுமதி
சென்னையில் பிப்.16-ஆம் தேதி முதல் புத்தகக் காட்சி நடத்த அனுமதி
சென்னையில் பிப்ரவரி 16-ஆம் தேதிமுதல் மார்ச் 6-ஆம் தேதிவரை புத்தகக் காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.
சென்னையில் புத்தகக் காட்சிக்கு அனுமதி அளிக்கவேண்டும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ரூ.100 கோடி மதிப்பில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் தேங்கியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவை தெரிவிப்பதாக முதல்வர் பதிலளித்திருந்தார்.
ஜனவரியில் நடைபெறவிருந்த புத்தகக் காட்சி கொரோனா தொற்று பரவலால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து சென்னையில் பிப்ரவரி 16ஆம் தேதிமுதல் மார்ச் 6ஆம் தேதிவரை புத்தகக் காட்சி நடைபெறவிருக்கிறது.