குற்றால அருவிகளில் நாளை முதல் குளிக்க அனுமதி

குற்றால அருவிகளில் நாளை முதல் குளிக்க அனுமதி

குற்றால அருவிகளில் நாளை முதல் குளிக்க அனுமதி
Published on

கொரோனா பொதுமுடக்கத்தால் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த குற்றால அருவிகளில் நாளை முதல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் இன்று முதல் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெள்யை பின்பற்ற வேண்டும் போன்ற விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீலாங்கரை, திருவான்மியூர், மாமல்லபுரம் கோயில் கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் நாளை முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com