தமிழ்நாடு
நிரந்தரப்பதிவு கணக்கு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய தகவல்
நிரந்தரப்பதிவு கணக்கு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய தகவல்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் நிரந்தரப் பதிவு கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் விவரங்களை இணைத்திடுமாறு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இம்மாதம் 28ஆம் தேதிக்குள் ஆதார் விவரங்களை இணைத்து எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகளின் அடிப்படையில், ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் கட்டணமில்லா தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.