பாரிவேந்தர் குறித்து கருத்து கூற போத்ராவிற்கு நிரந்தரத் தடை

பாரிவேந்தர் குறித்து கருத்து கூற போத்ராவிற்கு நிரந்தரத் தடை

பாரிவேந்தர் குறித்து கருத்து கூற போத்ராவிற்கு நிரந்தரத் தடை
Published on

இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தருக்கு எதிராக போத்ரா மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் கருத்து தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்துள்ளது.

வழக்குகளை சந்தித்து வரும் மதனுக்கு கடன் கொடுத்து விட்டு, போத்ரா மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் தன் மீது குற்றம் சுமத்துவதாகவும், தனது பெயரை களங்கப்படுத்தும் வகையில் பேட்டி அளிப்பதாகவும் பாரிவேந்தர் தரப்பில் சிவில் வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதன் விசாரணையில், ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் போத்ரா மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் பாரிவேந்தர் பற்றி கருத்து தெரிவிக்க கடந்த ஜூன் 16-ஆம் தேதி நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்தது. இந்நிலையில் இடைக்காலத் தடையை நிரந்தரத் தடையாக மாற்றி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com