“கள்ளக்குறிச்சி மாவட்டம் வேண்டாம்; விழுப்புரம்தான் வேண்டும்” - ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

“கள்ளக்குறிச்சி மாவட்டம் வேண்டாம்; விழுப்புரம்தான் வேண்டும்” - ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
“கள்ளக்குறிச்சி மாவட்டம் வேண்டாம்; விழுப்புரம்தான் வேண்டும்” - ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் கள்ளக்குறிச்சியும் ஒன்று. விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து கள்ளக்குறிச்சி உருவாக்கப்பட்டுள்ளது. கள்ளகுறிச்சி, விழுப்புரம் மாவட்டம் எல்லை தொடர்பான அரசாணையை அண்மையில் தமிழக அரசு வெளியிட்டது. 

அரசாணையில் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்தின் பெரும் பகுதி விழுப்புரம் மாவட்டத்திலேயே சேர்க்கப்பட்டது. ஆனால் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்தில் இருந்த பெரியசெவலை, டி.கொளத்தூர், சரவணபாக்கம், ஆமூர் உள்ளிட்ட ஊராட்சிகளை  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்த்ததால் அப்பகுதி மக்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

தங்களை மீண்டும் விழுப்புரம் மாவட்டதில் சேர்க்க வேண்டியும், 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட திருவெண்ணெய் நல்லூர் தாலுக்காவில் இணைக்கக்கோரியும் பொதுமக்கள் பெரியசெவலை உள்ளிட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவெ மனு அளித்திருந்தனர். 

இந்நிலையில், மீண்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் திரண்டனர். ஆனால் அவர்களை போலீசார் கைது செய்து மஹால் ஒன்றில் அடைத்து வைத்தனர். மனு அளித்த பிறகே கலைந்து செல்வோம் என கிராம மக்கள் வலியுறுத்தியதையடுத்து மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனுவை பெற்றார். மக்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com