“பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நினைவு கூரப்படுவார்” - மு.க.ஸ்டாலின்
பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நினைவு கூரப்படுவார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரியாரின் 47 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணாசாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தார். மேலும், பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியாரின் 47வது நினைவு நாள்! சமூக அடிமைத்தனம் - ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை - பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவு கூரப்படுவார்! பெரியார் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம்” எனத் தெரிவித்தார்.