\
பொன்னேரி: இரும்புக் கம்பியால் பெரியார் சிலை சேதம்; சேதப்படுத்தியவர் காவல் நிலையத்தில் சரண்

பொன்னேரி: இரும்புக் கம்பியால் பெரியார் சிலை சேதம்; சேதப்படுத்தியவர் காவல் நிலையத்தில் சரண்

பொன்னேரி: இரும்புக் கம்பியால் பெரியார் சிலை சேதம்; சேதப்படுத்தியவர் காவல் நிலையத்தில் சரண்
Published on

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. சிலையை சேதப்படுத்தியதாக செல்லக்கிளி என்பவர் பொன்னேரி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இது குறித்து செல்லக்கிளி காவல் நிலையத்தில் அளித்த வாக்குமூலத்தில், பெரியார் சிலையை இரும்பு கம்பியால் சேதப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். தவலறிந்து சம்பவ இடத்துக்குச் என்ற காவல் துறையினர், அங்கு சிலையின் முகம் சிதைக்கப்பட்டும், மூக்கு கண்ணாடி உடைக்கப்பட்டும் இருந்ததை கண்டு உடனடியாக சிலையை துணியால் மறைத்தனர்.

இதைத்தொடர்ந்து திராவிட கழகத்தினர் சம்பவ இடத்தில் திரண்டனர். சிலையை சேதப்படுத்தியதற்கான காரணம் குறித்து காவல் நிலையத்தில் சரணடைந்த செல்லக்கிளி என்பவரிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட இடத்திற்கு எதிரே உள்ள கடையின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com