தமிழ்நாடு
பெரியார் சிலை உடைப்பு காட்டுமிராண்டித்தனம்: ரஜினி கண்டனம்
பெரியார் சிலை உடைப்பு காட்டுமிராண்டித்தனம்: ரஜினி கண்டனம்
பெரியார் சிலையை உடைத்தது காட்டுமிராண்டித்தனம் என்று நடிகர் ரஜினிகாந்த் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், பெரியார் சிலை அகற்றப்படும் என்று சொன்னதும், பெரியார் சிலையை உடைத்ததும் காட்டுமிராண்டித்தனம் என்றார்.பெரியார் சிலை குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா முகநூலில் பதிவிட்டு, நீக்கிய கருத்து குறித்து ரஜினிகாந்த் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பெரும் சர்ச்சை நிலவி வரும் நிலையில், ரஜினி கருத்து தெரிவிக்காதது குறித்து விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவத்தை கண்டித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.