பெரியாரின் 139வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
பெரியாருக்கு இன்று 139வது பிறந்த தினம். இதையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள அவரது சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் மற்றும் மதுசூதனன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.
சென்னை சிம்சன் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப்படத்திற்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, திமுக முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.