தேனி: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்திப்பு

தேனி: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்திப்பு
தேனி: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்திப்பு

பெரியகுளத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆர்ப்பாட்டம் குறித்து கலந்துரையாடினார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பாக முல்லைப் பெரியாரின் உரிமை மற்றும் ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னையில் கேரளா அரசின் போக்கை கண்டித்தும் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த அண்ணாமலை சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர், ஓ.பன்னீர்செல்வம், ஆர்ப்பாட்டம் குறித்தும் நாளை மறுதினம் அதிமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்தும் கலந்துரையாடினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com