உருவாகிறது புதிய புயல்.. - விவரம் வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்
அந்தமான் வங்கக்கடல் பகுதியில் 16-ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், ''தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இது வரும் 15ம் தேதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 16ம் தேதி புயலாகவும் மத்திய வங்கக்கடல் பகுதியில் மையம் கொள்ளும்.15ஆம் தேதி 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும். 16ம் தேதி 55 முதல் 65 கிமீ வேகத்திலும், 17ஆம் தேதி 65 முதல் 75 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
வங்கக் கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக மத்திய வங்கக்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்'' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.