\
பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்து பரோலில் விடுவிப்பு

பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்து பரோலில் விடுவிப்பு

பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்து பரோலில் விடுவிப்பு
Published on

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை பிறப்பித்து வேலூர் சிறைச்சாலைக்கு அனுப்பியது தமிழக அரசு. இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண பரோல் கோரியிருந்தார் பேரறிவாளன்.

முன்னதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. பேரறிவாளனின் தாயாரின் கோரிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆணை சிறையை அடைந்த சில மணி நேரங்களில் பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவார்” என்று கூறியிருந்தார்.


இந்நிலையில் பேரறிவாளன், வேலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவரை காவல்துறை வேனில் போலீசார் திருப்பத்தூரில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com