
பேரறிவாளன் வழக்கில் கடந்த முறை போலவே இந்த முறையும் மாநில அரசு ஒதுங்கி நிற்க போகிறதா என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அறிவின் விடுதலை வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க முடியாது என ஆளுநர் அறிவித்து விட்டார். சட்ட ரீதியாக அதுகுறித்து சொல்ல எதுவும் இல்லை என கடந்த முறை போலவே மாநில அரசு ஒதுங்கி நிற்க போகிறதா? அல்லது மூத்த வழக்கறிஞரை அமர்த்தி வாதிட போகிறதா?” எனக் கேள்வியுள்ளார்.