பெரம்பலூர்: ஆட்சியர் அலுவலக சாலையில் பைக்வீலிங் செய்த இளைஞர்கள்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் இளைஞர்கள் பைக்வீலிங் செய்யும் காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பைக்வீலிங் எனப்படும் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபடுவோர் உயிருக்கும் மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கும் சில நேரங்களில் ஆபத்தாக முடியக்கூடும். இதனால், பைக்வீலிங் செய்வோரை காவல்துறையினர் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் இளைஞர்கள் சிலர் பைக்வீலிங் சாகசத்தில் ஈடுபடும் காட்சி வெளியாகியுள்ளது.
அதிக வாகன போக்குவரத்து இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆட்சியர் அலுவலகம் செல்லும் பிரதான சாலையில் இளைஞர்கள் செய்த பைக்வீலிங் மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள்,பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் இந்த சாலையில் அநாவசியமாக பைக்வீலிங் செய்யும் இளைஞர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.