\
பெரம்பலூர்: தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்

பெரம்பலூர்: தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்

பெரம்பலூர்: தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்
Published on

பெரம்பலூர் நகரில் பெற்ற மகனே தனது தாயை கழுத்தறுத்து கொலை செய்துள்ள துயரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் நகராட்சி பகுதி துறையூர் சாலையில் உள்ள விநாயகர் தெருவில் வசிக்கும் 70 வயது மூதாட்டி சோலையம்மாள். இவர், இன்று பிற்பகலில் கழுத்தறுபட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

செஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் சோலையம்மாளின் மகன் செல்வராஜ் என்பவர் தனது தாயை கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டார். கொலைக்கான காரணம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com