பெரம்பலூரில், மந்திரவாதி வீட்டில் இளம் பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
கார்த்திகேயன் என்ற மந்திரவாதி வீட்டில் சந்தேகத்திற்கு உரிய செயல்பாடுகள் நடப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் துறையினர் சென்று ஆய்வு நடத்திய போது, அங்கு இளம் பெண்ணின் அழுகிய உடல் கிடந்தது. விசாரணையில் அந்த சடலத்தை வைத்து மந்திரவாதி பூஜை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 9 மாதங்களுக்கு முன் சிறுமி ஒருவரை நரபலி கொடுத்ததாக கைது செய்யப்பட்ட மந்திரவாதி கார்த்திகேயன், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதற்கிடையே, மந்திரவாதியும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆகையால், இளம் பெண்ணையும் நரபலி கொடுத்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக திருச்சியைச் சேர்ந்த தடயவியல் வல்லுநர்கள் மந்திரவாதியின் வீட்டை ஆய்வு செய்து வருகின்றனர்.