\
பெரம்பலூர்: டாஸ்மாக் பாரில் தகராறு: பார் உரிமையாளரின் மண்டை உடைப்பு!

பெரம்பலூர்: டாஸ்மாக் பாரில் தகராறு: பார் உரிமையாளரின் மண்டை உடைப்பு!

பெரம்பலூர்: டாஸ்மாக் பாரில் தகராறு: பார் உரிமையாளரின் மண்டை உடைப்பு!
Published on

பெரம்பலூர் அருகே டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் பார் உரிமையாளர் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே நக்கசேலம் பகுதியில் 6318 உரிமம் எண் கொண்ட டாஸ்மாக் மதுபானக் கடையையொட்டி உரிமம் பெற்ற பார் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் அருகில் உள்ள அடைக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலர் பாரில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அவர்கள் மதுபோதையில் பார் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குவந்த பார் உரிமையாளர் செல்வராஜ் என்பவரை தகராறில் ஈடுபட்டவர்கள் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதனால் பார் உரிமையாளர் செல்வராஜின் தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது.

மேலும் பாரில் வேலை செய்தவர்களையும் தாக்க முயன்ற கும்பல் பாரின் மேற்கூரையையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதையடுத்து அருகில் இருந்த டாஸ்மாக் கடை மீதும் பாட்டில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறில் காயமடைந்த பார் உரிமையாளர் செல்வராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி தகவலறிந்த பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com