தமிழ்நாடு
பெரம்பலூர்: கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழப்பு
பெரம்பலூர்: கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழப்பு
கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்த சோகம் பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளரான பொன்.கலியபெருமாள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதே நோயால் பாதிக்கப்பட்டிருந்த அருமடல் கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே குன்னத்தில் வசிக்கும் லெனின் என்பவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.