\
கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

கும்பக்கரை அருவியில் குளிக்க தடை
Published on

பெரியகுளம் கும்பக்கரை அருவியில் தொடர்ந்து 3 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள  கும்பக்கரை அருவி மிகச் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி கும்பக்கரை அருவியில் தொடர்ந்து 3வது நாளாக பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தையொட்டி இங்கு வரும் சுற்றுலாபயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com