தமிழ்நாடு
குற்றால அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
குற்றால அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, செங்கோட்டை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் குற்றாலம் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நேற்று அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.