
மருத்துவர் வராமல் செவிலியர்களே பிரசவம் பார்த்த நிலையில் குழந்தை இறந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பொய்யுண்டார்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரின் மனைவி கனிமொழிக்கு இரண்டாவது பிரவசத்திற்கு நேற்று மாலை வலி ஏற்பட்டதால் வடக்கூர் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் அனுமதித்தனர். அப்போது அங்கு மருத்துவர் இல்லாதால் உறவினர்கள் மருத்துவர் எப்போது வருவார் எனக் கேட்டபோது உடனே வந்துவிடுவார் எனக் கூறியுள்ளனர். ஆனால் இரவு 1 மணிவரையும் மருத்துவர் வராதநிலையில் மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் பிரசவம் பார்த்து ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை குழந்தையின் தாய் கனிமொழி தனது குழந்தையை பார்க்கவேண்டும் எனக் கூறியபோது குழந்தையை காட்டவில்லை.
இதையடுத்து உறவினர்கள் விசாரித்த போது குழந்தை இரவே இறந்தது தெரியவந்தது. மருத்துவர் வராமல் செவிலியர் மற்றும் ஆயாம்மா ஆகியோர் பிரசவம் பார்த்ததால்தான் குழந்தை இறந்துவிட்டதாக குற்றம்சாட்டிய உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் இன்று மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வீடுகளில் பிரசவம் பார்க்கக் கூடாது என அரசு தீவிரமாக நடடிக்கை எடுத்து வரும் நிலையில் அரசு மருத்துவனைகளில் அலட்சியத்தால் இதுபோன்ற உயிரிழப்பு ஏற்பட்டால் எங்கே செல்வது என அப்பகுதி மக்கள் ஆதகங்களம் தெரிவித்தனர்.