தமிழ்நாடு
யார் வேண்டாம் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்: கனிமொழி
யார் வேண்டாம் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்: கனிமொழி
யார் வேண்டாம் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக திராவிட இயக்கத்தின் வழிவந்தது இல்லை என கூறினார். நம்பிக்கை வாக்கெடுப்பை பொறுத்தே திமுகவின் நிலைப்பாடு இருக்கும் எனவும் தேர்தல் வந்தால் யார் வேண்டாம் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றும் கனிமொழி தெரிவித்தார். அதிமுக அரசாங்கம் எப்போதும் இயங்காத அரசாங்கம்தான் என கனிமொழி குற்றஞ்சாட்டினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக தலையிடாது என கூறிய அவர், சுயமரியாதையுடன் செயல்படவேண்டும் என திராவிட இயக்கம் சொல்லி தந்துள்ளது எனவும் கனிமொழி கூறினார்.