\
பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்கு உற்சாக வரவேற்பு

பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்கு உற்சாக வரவேற்பு

பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்கு உற்சாக வரவேற்பு
Published on: 

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த எம்எல்ஏ செம்மலைக்கு ஓமலூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான அவர், சொந்தத் தொகுதியான மேட்டூருக்கு செல்வதற்காக இன்று ‌காலை ஓமலூர் வந்தார். ‌ அப்போது அப்பகுதியில் குவிந்த அதிமுக தொண்டர்கள், ஜெ.தீபா பேரவையினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து செம்மலைக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த செம்மலையை மக்கள் வெகுவாகப் பாராட்டினர். பின்னர் அவர்கள் செம்மலையை தோளில் சுமந்தபடி‌ சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றனர். அப்போது வழிநெடுகிலும் அவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இதனால் மிகுந்த உற்சாகமடைந்த அவர், மக்கள் மன்றத்தில் பன்னீர்செல்வம் அணியினருக்கே பெரும்பான்மை இருப்பதாகக் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com