பேருந்து கட்டண உயர்வுக்கு மக்கள் மன்னிக்க வேண்டும்: அமைச்சர் தங்கமணி
போக்குவரத்து கழகம் தவிர்க்க முடியாத காரணத்தினால் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
6 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மாநகரம் மற்றும்
நகரங்களில் 1 முதல் 20 நிலைகளை கொண்ட வழித்தடத்தில் 3 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 5 ரூபாயாக
உயர்த்தப்பட்டுள்ளது. 12 ரூபாயாக இருந்த அதிகபட்ச கட்டணம் 19 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பேருந்து கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதலே அமலுக்கு வந்துள்ளது. இதனால், இன்று காலை பேருந்தில் பயணம் செய்த
பெரும்பாலான மக்களுக்கு கட்டண உயர்வு குறித்து தகவல் தெரிந்திருக்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, போக்குவரத்து கழகம் தவிர்க்க முடியாத காரணத்தினால் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகவும் பொது மக்கள் எங்களை மன்னித்து ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.