\
ரேஷனில் வாங்காத பொருட்களை வழங்கியதாக மெசேஜ்.. பொதுமக்கள் அதிர்ச்சி

ரேஷனில் வாங்காத பொருட்களை வழங்கியதாக மெசேஜ்.. பொதுமக்கள் அதிர்ச்சி

ரேஷனில் வாங்காத பொருட்களை வழங்கியதாக மெசேஜ்.. பொதுமக்கள் அதிர்ச்சி
Published on

திருவாரூரில், ரேஷன் கடைகளில் வாங்காத பொருட்கள் தங்களுக்கு வழங்கப்பட்டதாக குறுஞ்செய்தி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ரேஷன் கடைகளில் மாதம்தோறும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதில்லை என மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் இருப்பு விவரம் பலகையில் எழுதப்பட்டு பல மாதங்கள் ஆவதாக புகார் கூறப்படுகிறது.

விலையில்லா அரிசி 20 கிலோ முழுமையாக வழங்கப்படுவதில்லை எனக் கூறும் மக்கள் , ரேஷன் கடை ஊழியர்கள் தங்களை அலைக்கழிப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில் ரேஷன் கடைகளில் வாங்காத பொருட்கள் வாங்கப்பட்டதாக குறுஞ்செய்தி வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com