பேரவை நிகழ்வுகள் நேரலை... தொடரும் கோரிக்கை

பேரவை நிகழ்வுகள் நேரலை... தொடரும் கோரிக்கை

பேரவை நிகழ்வுகள் நேரலை... தொடரும் கோரிக்கை
Published on

பேஸ்புகில் நேரலை செய்வது பிரபலாமாக உள்ள டிஜிட்டல் காலத்தில் தமிழக அரசு காரணம் சொல்லாமல், பேரவை நிகழ்வுகளை நேரலையாக பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சட்டப்பேரவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் இல்லாத நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது அதில் அரசு வெற்றியும் பெற்றது.

மறைமுக வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி ஓபிஎஸ் அணியினர், திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து வலுக்கட்டாயமாக திமுக-வினர் வெளியேற்றபட்டனர். ஆனால் சட்டசபையில் நடந்தவற்றை எதையுமே மக்கள் நேரலையாக பார்க்க முடியவில்லை.

ஆளும் கட்சி எதாவது ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சிப்பதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர் கட்சிகள் அமளியில் ஈடுபடுவதும், எதிர் கட்சியினரை சபாநாயகர் வெளியே அனுப்புவதும் வழக்கமாவிவிட்ட இந்த சூழ்நிலையில் சட்டசபையை மக்களே நேரடியாகப் பார்க்கும் வகையில் தொலைக்காட்சி நேரலை உடனே தேவை என்ற கருத்து நீண்ட நாட்களாவே உள்ளது.

இன்று வெளியான சட்டசபை வீடியோக்களான, சபாநாயகர் தனபாலை தள்ளுவது, ஸ்டாலினை குண்டுகட்டாக தூக்குவது, கிழிந்த சட்டையுடன் ஸ்டாலினின் பேட்டி - பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. இதுவே, சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக மக்களால் பார்க்க முடிந்து இருந்தால் அவை இன்னும் பரபரப்பை எற்படுத்தியிருக்கும்.

சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்வதை திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் விரும்பியது இல்லை. தற்பொழுது வரை அரசு திரைப்படங்கள் பிரிவு, சட்டப்பேரவை நிகழ்வுகளை பதிவு செய்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வழங்கும். இதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கு எந்த காட்சிகள் சென்றடைய வேண்டும் என்பதையும் அது எப்போது சென்றடைய வேண்டும் என்பதையும் தனது கட்டுக்குள் வைத்துள்ளது.

2015-ல் இது தொடர்பாக லோக் சட்டா கட்சி தொடுத்த உயர்நீதிமன்ற வழக்கில், தமிழக அரசு சட்டசபை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்ப செய்ய போதிய பணமில்லை என்று காரணம் சொன்னது. கடந்த ஆண்டு, தேமுதிக தனது சொந்த தொலைக்காட்சியில் இலவசமாக ஒளிபரப்பு செய்ய முன் வந்தது. இருப்பினும் அரசு இந்த நீண்ட நாள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

பேஸ்புகில் நேரலை செய்வது பிரபலாமாக உள்ள டிஜிட்டல் காலத்தில் தமிழக அரசு காரணம் சொல்லாமல், பேரவை நிகழ்வுகளை நேரலையாக பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com