அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய மக்கள்! கூட்டத்தில் இருந்து வெளியேறிய அமைச்சர் பொன்முடி!

அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய மக்கள்! கூட்டத்தில் இருந்து வெளியேறிய அமைச்சர் பொன்முடி!
அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய மக்கள்! கூட்டத்தில் இருந்து வெளியேறிய அமைச்சர் பொன்முடி!

விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி அமைச்சர் பொன்முடியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவர் பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அதிமுக ஒன்றிய கவுன்சிலர் திட்டமிட்டு ஆட்களை அழைத்து வந்து சதி செய்ததாக அமைச்சர் பொன்முடி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் நிகழ்ந்தது என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் இன்று ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, பொதுமக்களுக்கு தேவையான திட்டப் பணிகள், வரவு செலவு கணக்குகள், நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது மக்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கவில்லை என வீரபாண்டி அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரேவதி பெருமாள் குற்றம்சாட்டினார். 22 லட்சம் பணிகள் நடைபெறாமல் உள்ளதாக கூறி ஆவணங்களை அமைச்சரிடம் கொடுத்த போது அதனை அதிகாரிகள் வாங்க மறுத்தனர்.

இதனால் தனக்கு வாக்களித்த மக்களுக்கு தான் என்ன பதில் சொல்வது என ரேவதி அமைச்சர் பொன்முடியிடம் கேள்வி எழுப்பினார். அப்போது திட்டமிட்டு ஆட்களை கூட்டி வந்து பிரச்சனை ஏற்படுத்த வந்தாயா எனக் கூறிய அமைச்சர் பொன்முடி , பொதுமக்களின் கோரிக்கைகளை மட்டும் கூறுங்கள் எனக் கூறினார்.

இதனால் அங்குள்ள பொதுமக்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து அமைச்சரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஒரு கட்டத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி அமைச்சரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நிகழ்ச்சியை பாதியிலேயே முடித்துக் கொண்டு அமைச்சர் புறப்பட்டு சென்றார்.

அதிமுக கவுன்சிலர் ரேவதி பெருமாள் திட்டமிட்டு ஆட்களை அழைத்து வந்து ஆட்சியை குறை கூறுவதற்காகவே நடத்தப்பட்ட சதி என்று அமைச்சர் பொன்முடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/t9G2BkqgpWc" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com