நெடுஞ்சாலைகளில் அடைத்து ஊருக்குள் திறக்கப்படும் மதுக்கடைகள்
நெடுஞ்சாலை அருகே இருக்கும் மதுபானக் கடைகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், அவற்றை ஊருக்குள் கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதுக்கோட்டை மாவட்டம் கல்லூரில், நெடுஞ்சாலை அருகே இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. அந்த கடை தற்போது ஊருக்குள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டுக்கோட்டை- காரைக்குடி சாலையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதேபோல்,பொள்ளாச்சி ஊத்துக்காடு சாலையில் மதுபானக் கடை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவற்றை ஊருக்குள் கொண்டுவர அரசு எடுக்கும் முடிவு எந்தவிதத்தில் சரியாதனதாக இருக்கும் என பொதுக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.