‘ தாய்ப்பால் கொடுக்க முடியல. மாத்திரையைத்தான் குழந்தைகளுக்கு கொடுக்கிறோம்’: தவிக்கும் தூத்துக்குடி பெண்கள்..!

‘ தாய்ப்பால் கொடுக்க முடியல. மாத்திரையைத்தான் குழந்தைகளுக்கு கொடுக்கிறோம்’: தவிக்கும் தூத்துக்குடி பெண்கள்..!

‘ தாய்ப்பால் கொடுக்க முடியல. மாத்திரையைத்தான் குழந்தைகளுக்கு கொடுக்கிறோம்’: தவிக்கும் தூத்துக்குடி பெண்கள்..!
Published on

ஸ்டெர்லைட் ஆலையால் தாய்ப்பால் தரவேண்டிய குழந்தைகளுக்கு நோய் பாதிப்பால் தினமும் மருந்து மாத்திரையை கொடுக்க நேரிடுவதாக பெண்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையால் தங்களது இளைய தலைமுறை கடுமையாக பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்கள் கூறியதாவது,

“ எல்லா குழந்தைகளும் காலையில் எழுந்தவுடன் காஃபி குடிக்கும். ஆனால் எங்கள் குழந்தைக்கு சங்கெடுத்து மாத்திரை தான் கொடுக்க வேண்டும். எங்களுடைய காலம் முடிந்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் எங்கள் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்..? ஸ்டெர்லைக்கு ஆதரவாக கூட சிலர் பேசுகின்றனர். அவர்கள் எங்கள் குழந்தைகள் குறித்து குறைந்தப்பட்சம் ஒரு நிமிடமாவது யோசித்து பார்க்க வேண்டாமா..? நாசமாக போகும் ஸ்டெர்லைட் எங்களுக்கு வேண்டவே வேண்டாம். எங்கள் குழந்தைகளின் சாவை நாங்கள் யாரும் பார்க்க விரும்பவில்லை.

பழைய ஸ்டெர்லைட் ஆலையால் இவ்வளவு பிரச்னையும். பணத்தை பிச்சு திங்க முடியுமா..? விவசாயம் எல்லாம் செத்து போச்சு. மனுசனுக்கு முக்கியமானது இரண்டு தேவை. ஒன்ணு தண்ணி. இரண்டாவது சோறு. ஆனால் ரெண்டும் எங்களுக்கு கிடைப்பதில்லை. ஒரு குடம் தண்ணீரை 10 ரூபாய் கொடுத்து வாங்குறோம். எங்கள் மீது தேவையில்லாமல் பொய் வழக்கு போடுகின்றனர். அதனை முதலில் வாபஸ் பெற வேண்டும். சின்ன குழந்தைகளுக்கு கூட அனிமியா, இரத்த சோகை உள்ளிட்ட நோய்கள் வருகின்றன. குழந்தைக்கு இந்த வயதில் நோய் வர வேண்டுமா..? சுவாசிக்க சரியான காற்று இல்லை. கிட்னி பாதிப்பு ஏற்படும் என கூறுகின்றனர்” என வேதனையுடன் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com